நீரவ் மோடியின் மனைவிக்கு ரெட்கார்னர் நோட்டீஸ்..!
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான வைர வியாபாரி நீரவ் மோடியின் மனைவி ஆமி மோடிக்கு எதிராக இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்றத்திற்காக நீரவ் மோடி நடத்திய சில நிறுவனங்களில் ஆமி மோடி இயக்குநராக இருந்துள்ளார். வங்கி மோசடி நடந்த சமயத்தில் அவர் இந்தியாவில் இருந்து தப்பி அமெரிக்காவுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் இன்டர்போல் பிறப்பித்துள்ள ரெட்கார்னர் நோட்டீஸ் என்பது சர்வதேச கைது வாரன்டாகும்.
நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டு அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு நடைபெற்று வருகிறது. லண்டனில் அவரது நீதிமன்ற காவல் வரும் 27 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Comments