முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார்
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, பாஜகவில் இணைந்துள்ளார்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலை, 2013ஆம் ஆண்டு, கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் ஏஎஸ்பி-யாக தன் பணியை தொடங்கினார்.
அரசியலில் ஆர்வம் கொண்டதால் ஐபிஎஸ் பணியை துறந்து, பொதுவாழ்வில் ஈடுபடப் போவதாக கூறிவந்தார். இந்நிலையில், டெல்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார்.
எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டு கட்சியில் பணியாற்ற உள்ளதாக அவர் தெரிவித்தார்.
Comments