லடாக்கில் 17 ஆவது வாரமாக நீடிக்கும் எல்லை பதற்றம்..அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு..!
லடாக்கில் எல்லைப்பதற்றம் 17 ஆவது வாரமாக நீடிக்கும் நிலையில், இந்திய-சீன இருதரப்பு ராணுவ மட்டத்திலான அடுத்த கட்ட பேச்சுவார்தைகளை நடத்த இரண்டு நாடுகளும் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பேச்சுவார்த்தை எப்போது, எங்கு வைத்து நடக்கும் என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதே நேரம் இந்த பேச்சுவார்த்தை கமாண்டர்கள் அல்லது மேஜர் ஜெனரல் அதிகாரிகள் மட்டத்தில் நடக்கும் என கூறப்படுகிறது.
எல்லைப் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், கடந்த வாரம் இருதரப்பு ராஜீய பேச்சுவார்த்தைகள் காணொலி வாயிலாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து எல்லை நிலவரம் குறித்து, முப்படைகளின் தலைமை தளபதி, ராணுவ தளபதிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையே அதுவரை 5 முறை ராணுவ மட்டத்திலான பேச்ச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும், எல்லையில் இருந்து சீனா படைகளை விலக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments