எந்த ஆதாரமுமின்றி அமெரிக்கா பொய்யான குற்றச்சாட்டுகளை சுமர்த்துவதாக 'டிக்டாக்' புகார்
அமெரிக்க பரிவர்த்தனைகளை தடை செய்யும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாக உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிக்டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்து உள்ளது.
தாய் நிறுவனமாக பைட் டான்ஸின் உரிமைகளை அரசியல் ஆதாயத்துக்காக அமெரிக்க அதிகாரிகள் பறித்துள்ளதாக டிக்டாக் குற்றம் சாட்டி உள்ளது.
அசாதரணமான, மிகப்பெரிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியதாக தங்கள் நிறுவனத்தின் மீது எந்த ஆதாரமும் இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளதாகவும் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தை தவறாக பயன்படுத்தி உள்ளதாகவும் 39 பக்க மனுவில் டிக்டாக் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மற்றும் அதிகாரிகள் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
Comments