புல்வாமா தாக்குதல் தொடர்பாக இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்
புல்வாமா தாக்குதல் தொடர்பாக விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை சார்பில் ஜம்மு நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புல்வாமா என்ற இடத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.
தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் அப்துல் ரஷீத் காசி என்ற கம்ரான் மற்றும் உள்ளூர் ஹிலால் அகமது ஆகியோரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.
ஆனால், கடந்த ஆண்டு பிரப்ரவரியில் புல்வாமாவில் நடந்த மோதலில் ஹிலால் அகமது சுட்டுக் கொல்லப்பட்டான். வழக்கில் தொடர்புடைய 3 பேர் கொல்லப்பட்டுவிட்ட நிலையில், மேலும் 8 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
Comments