சட்டமன்ற உரிமை மீறல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு
சட்டமன்ற உரிமை மீறல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
கடந்த 2017ம் ஆண்டு தடைசெய்யப்பட்ட குட்காப் பொருட்களை சட்டமன்றத்திற்குள் கொண்டு வந்ததாக, ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏக்கள் மீது உரிமை மீறல் பிரச்னை எழுப்பப்பட்டு சட்டமன்ற உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையில், உரிமை மீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த மனு மீதான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு காலை 10.30 மணியளவில் தீர்ப்பளிக்க உள்ளது.
Comments