குடியரசுக் கட்சியில் அதிபர் வேட்பாளராக ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற ஜனநாயகக் கட்சி மாநாட்டில் ஜோ பிடனை வேட்பாளராக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில் வட கரோலினாவின் சார்லோட் நகரில் நடைபெற்ற குடியரசுக் கட்சி மாநாட்டில் டொனால்ட் டிரம்பை அதிபர் வேட்பாளராகவும், மைக் பென்சை துணை அதிபர் வேட்பாளராகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். மாநாட்டில் பேசிய அதிபர் டிரம்ப், தான் மேலும் 4 ஆண்டுகள் அதிபராக இருப்பது உறுதி என்று கூறினார்.
நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு, துப்பாக்கிக்கான உரிமைகள், வரி குறைப்புகள் மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் குறித்து பரப்புரை மேற்கொள்வதென விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ட்ரம்பின் அதிரடித் திட்டங்களில் ஒன்றான 10 மாதங்களில் 10 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என் பரப்புரையை தீவிரமாக முன்னெடுத்துச் செல்லவும் தீர்மானிக்கப்பட்டது.
Comments