பினராயி விஜயன் அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் அரசுக்கு எதிராக, சட்டமன்றத்தில் காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
தங்கக் கடத்தல் தொடங்கி பல்வேறு புகார்கள் மற்றும் முறைகேடுகளை குற்றஞ்சாட்டி இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. விவாதங்களுக்கு பினராயி விஜயன் பதிலளித்த போது, எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தீர்மானத்தின் மீதான வாக்களிப்பில், அரசுக்கு ஆதரவாக 87 பேரும், எதிராக 40 பேரும் வாக்களித்தனர். பெரும்பான்மைக்கு தேவையானதைவிட அதிக இடங்கள் கிடைத்ததால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்தது.
Comments