ஊரடங்கில் இருந்து விலகும் 4 ஆம் கட்டம் துவங்கும் போது, மெட்ரோ ரயில் சேவையை துவக்கப்படும் என தகவல்

0 10048
வரும் ஒன்றாம் தேதி, ஊரடங்கில் இருந்து விலகும் 4 ஆம் கட்டம் துவங்கும் போது, மெட்ரோ ரயில் சேவையை துவக்க அனுமதி வழங்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வரும் ஒன்றாம் தேதி, ஊரடங்கில் இருந்து விலகும் 4 ஆம் கட்டம் துவங்கும் போது, மெட்ரோ ரயில் சேவையை துவக்க அனுமதி வழங்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், மாநில அரசுகளே இதில் இறுதி முடிவு எடுக்க வேண்டும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.பல கட்டுப்பாடுகளுடன் வரும் ஒன்றாம் தேதியில் இருந்து டெல்லி மெட்ரோ சேவைகள் துவக்கப்படும் என கூறப்படுகிறது.

பள்ளிகளைப் பொறுத்தவரை அவை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும் மக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள் போன்றவை திறக்கப்பட வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது.

மெட்ரோக்களில் அதிகபட்ச பயணம் இரண்டு மணி நேரமாக கட்டுக்குள் இருக்கும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மெட்ரோ சேவையை துவக்கலாம் என மத்திய அரசு கருவதுவதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments