காங். இடைக்கால தலைவராக சோனியாகாந்தி நீடிக்கிறார் என தகவல்

0 2425
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியாகாந்தியே நீடிப்பார் என அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியாகாந்தியே நீடிப்பார் என அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குப்பின், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, சோனியாகாந்தி, இடைக்கால தலைவர் பொறுப்பை ஏற்றார். இப்பொறுப்பை ஏற்று, கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெற்றது.

இந்த சூழலில், சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் காணொலி காட்சி வாயிலாக சுமார் 7 மணி நேரம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவரை நியமிக்க வேண்டும் - கட்சியில் பல்வேறு சீர் திருத்தங் களை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர், சோனியா காந்திக்கு எழுதி இருந்த கடிதத்தைத் தொடர்ந்து, காரிய கமிட்டி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த அழைப்பை ஏற்று, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் ஏ.கே. அந்தோணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். புதிய தலைவரை தேர்வு செய்யுமாறு, சோனியாகாந்தி விடுத்த வேண்டுகோளை மன்மோகன்சிங் உள்ளிட்டோர் நிராகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரம், கூட்டத்தில் பங்கேற்ற மூத்த தலைவர்களில் ஒரு சிலர் சோனியாகாந்தியே நீடிக்க வேண்டும் என்றும், பலர், ராகுல்காந்தி தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால், புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியை உடனடியாக துவக்குமாறு சோனியாகாந்தி கேட்டுக்கொண்டார்.

சுமார் 7 மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தின் முடிவில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தியே நீடிப்பார் என முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது.

அடுத்த 6 மாதத்திற்குள், காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் எனவும் அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக டெல்லி தகவல்கள் தெரிவிக் கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments