பொதுத்துறை வங்கிகளின் இணைப்பால் வேலையிழப்பு ஏற்படவில்லை - பிஎன்பி வங்கி தலைவர்
பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்டதால் ஊழியர்கள் யாரும் வேலையிழக்கவில்லை என பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவர் மல்லிகார்ஜுன ராவ் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் ஓரியண்டல் பாங்க் ஆஃம் காமர்ஸ், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியன கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி இணைக்கப்பட்டன. அதை அடுத்து வங்கியின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது என மல்லிகார்ஜுன ராவ் கூறியுள்ளார்.
கொரோனா காரணமாக வங்கிக் கடன்களுக்கு அளிக்கப்பட்ட தவணை சலுகை இந்த மாதம் முடிவடைய உள்ள நிலையில், ஓரளவு பொருளாதார மாற்றம் ஏற்பட்டுள்ளதால், சலுகை நீட்டிப்பை ரிசர்வ் வங்கி வழங்க கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments