நாடு முழுவதும் 1000 பொது தகுதி தேர்வு மையங்கள் அமைக்கப்படும் - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
மத்திய அரசு பணிகளுக்கான தேசிய தேர்வு முகமை நடத்தும் பொது தகுதி தேர்வுகளுக்காக நாடு முழுதும் 1000 மையங்கள் ஏற்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மொத்தம் 700 மாவட்டங்கள் உள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மையம் ஏற்படுத்தப்படும்.
தகுதி தேர்வை எழுத பெண்கள் வெகு தூரம் செல்வதை பல குடும்பங்கள் விரும்பாமல் இருப்பதால், மாவட்டம் தோறும் அமைக்கப்படும் மையங்களால் அவர்கள் பயன்பெறுவார்கள் என அவர் கூறினார்.
அத்துடன், தேசிய தேர்வு முகமை 12 மொழிகளில் தேர்வை நடத்தும் என்று குறிப்பிட்ட அவர், இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பெரும்பாலான மத்திய அரசு பணிகளுக்கு நபர்களை தேர்வு செய்வதற்கு ஆன்லைனில் பொது தகுதி தேர்வு நடத்த, தேசிய தேர்வு முகமையை ஏற்படுத்தும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 19 ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது.
Comments