காவல்துறை, அரசியல் கட்சிகள், எம்.பி, எம்.எல்.ஏக்களுடன் ரவுடிகள் கூட்டணி - உயர்நீதிமன்றம் கவலை
தமிழகத்தில் காவல்துறையினர், அரசியல் கட்சிகள் மற்றும் எம்.பி- எம்.எல்.ஏக்களுடன் சில ரவுடிகள் கூட்டணி வைத்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததை எதிர்த்து வேலு என்பவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ரவுடிகள், அரசியல்வாதிகள் என எல்லோரிடமும் சட்ட விரோத ஆயுதங்கள் இருப்பது தெரிய வருவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
போலீசார் தாக்கப்படும் சூழல் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தூத்துக்குடி காவலர் சுப்பிரமணியனின் மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது வேதனை அளிப்பதாக தெரிவித்தனர்.
எனவே, ரவுடிகளையும் , சமூக விரோதிகளையும் ஒழிக்க கடுமையான சட்டங்களை இயற்றுமாறு, தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், 2 வாரங்களுக்குள் காவல் துறை டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.
Comments