கொரோனாவை கட்டுப்படுத்தும் வரை நீட், ஜெ.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்க மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்
நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா பேரழிவு, வெள்ளப் பாதிப்பு உள்ளிட்ட நெருக்கடிகளால், பொதுப் போக்குவரத்திற்கு தடைகள் உள்ள நிலையில், மாணவர்கள் தேர்வு மையங்களை அணுக முடியாத சூழல் நிலவுகிறது என்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களும், வசதி வாய்ப்புகள் குறைந்த மாணவர்களும் தேர்வு மையங்களைச் சென்றடைவது இயலாத ஒன்று என்றும் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தேர்வு எழுத வரும் யாருக்கேனும் வைரஸ் தொற்று இருந்தால், நாடு முழுவதும் மீண்டும் ஒரு தொற்று அலை உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், மாணவர்களின் உடல்நலனையும், எதிர்காலத்தையும் அரசு கவனத்தில் கொண்டு கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும் வரை ஜெ.இ.இ. மற்றும் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி உள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்தும் வரை நீட், ஜெ.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்க மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம் #NEETExam | #JEEExam | #PostponeRequest | #MKStalin https://t.co/lqM8ZFEDuE
— Polimer News (@polimernews) August 24, 2020
Comments