பாகிஸ்தானுக்கு அதிநவீன போர்கப்பலை சீனா விற்றுள்ளதாக தகவல்
பாகிஸ்தானுக்கு அதிநவீன போர்க்கப்பலை சீனா விற்றுள்ளதாகவும் அடுத்தாண்டுக்குள் கடற்படைக்கு மேலும் 3 கப்பல்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஷாங்காயில் உள்ள சீன அரசுக்கு சொந்தமான ஹுடோங் ஜொங்வா கப்பல் கட்டும் தளத்தில் போர்கப்பல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், உயர் அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஏவுகணை தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடிய 054A/P ரக போர்கப்பல், மற்ற நாட்டுக்காக கட்டப்பட்ட முதல் மிகப்பெரிய கப்பல் என்றும் சீனாவின் ராணுவ ஏற்றுமதி துறைக்கு ஒரு முக்கியமான மைல்கல் என்றும் அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இது பாகிஸ்தான் கடற்படையின் போர் சக்தியை இரட்டிப்பாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளன. அடுத்த ஆண்டுக்குள் பாகிஸ்தான் கடற்படைக்கு மேலும் மூன்று போர்க்கப்பல்களை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments