சீன நிறுவனங்களை முழுமையாகத் தடுக்க முடியாது என அதிகாரிகள் கருத்து
இந்தியாவில் சீன நிறுவனங்களை முழுமையாகத் தடுத்து விட முடியாது என வணிகத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிழக்கு லடாக்கின் கால்வனில் இந்திய - சீனப் படையினரின் மோதலுக்குப் பின் சீன நிறுவனங்களின் ஐம்பதுக்கு மேற்பட்ட செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.
சீனாவில் இருந்து மின்கருவிகள், மின்னணுக் கருவிகள், செல்பேசிகள், கணினிகள் இறக்குமதிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவின் முதலீடுகளில் சில முக்கியமானவை என்பதால் அவற்றை முழுவதுமாகத் தடை செய்ய இயலாது எனப் பெயர் குறிப்பிட விரும்பாத வணிகத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இணையவழியில் பொருட்களை விற்கும் நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வாடகைக் கார் சேவை நிறுவனங்கள் ஆகியவற்றில் சீன முதலீடுகள் இருப்பதை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Comments