கோயம்பேடு சந்தையைத் திறக்க விரைவில் நல்ல செய்தி வரும் என விக்கிரமராஜா நம்பிக்கை
சென்னை கோயம்பேடு சந்தையைத் திறப்பது தொடர்பாக விரைவில் நல்ல செய்தி வரும் எனத் தமிழக முதலமைச்சரைச் சந்தித்த பின் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்கக் கோரித் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வணிகர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் முதலமைச்சர் ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்தார்.
புதனன்று துணை முதலமைச்சரையும் சந்தித்துக் கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும், அதன்பின் விரைவில் கோயம்பேடு மார்க்கெட் திறக்கப்படும் என்கிற நல்ல செய்தி வரும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments