தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நான்கரை மாதங்களுக்கு பிறகு மீண்டும் விசாரணையை தொடங்கியது
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஒரு நபர் ஆணையம் சுமார் நான்கரை மாதங்களுக்கு பிறகு மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த துப்பாக்கிச்சூடு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இதுவரை 493 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சுமார் நான்கரை மாதங்களுக்கு பிறகு தனது 21-வது கட்ட விசாரணையை ஒரு நபர் ஆணையம் இன்று தொடங்கியுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை வரை 26 சாட்சியங்களிடம் விசாரணை நடத்த ஆணையம் திட்டமிடப்பட்டுள்ளது.
Comments