எனது தந்தைக்கு கொரோனா குணமாகிவிட்டதாக வெளியான தகவல் வதந்தி - எஸ்பிபி சரண்

0 8461
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவரது மகன் எஸ்.பி.பி சரண் கேட்டுக்கொண்டுள்ளார்.

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவரது மகன் எஸ்.பி.பி சரண் கேட்டுக்கொண்டுள்ளார்.

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனாவிலிருந்து குணமடைந்து விட்டதாக சமூக வலைதலங்களில் தகவல் பரவியது. இந்த நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள எஸ்.பி.பி சரண், நெகடிவ் அல்லது பாசிடிவ் என்பதல்ல விஷயம் என்றும் அவர் தற்போதும் எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடனே சுவாசித்து வருகிறார் என்றும் கூறியுள்ளார்.

தமது தந்தையின் உடல்நலம் பற்றிய தகவல் தமக்கே முதலில் வரும் என்றும் ஆகவே, தவறான செய்திகளை வெளியிடுபவர்களிடம் கவனமாக இருங்கள் என்றும் எஸ்.பி.பி சரண் கேட்டுக்கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments