50 வயது பெண், மகள், 2 பேரக் குழந்தைகள், 2 வளர்ப்பு நாய்களுடன் சடலமாக மீட்பு

0 4270

பட்டுக்கோட்டையில் 50 வயது பெண்மணி ஒருவர், தனது மகள், 2 பேரக்குழந்தைகள், 2 வளர்ப்பு நாய்களுடன் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வளவன்புரத்தில் சகாதேவன் என்பவருக்கு சொந்தமான வீட்டிற்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குடிவந்த சாந்தி என்ற பெண், தனது மகள், 2 பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். அவர்கள் 2 நாய்களையும் வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாததால் சந்தேகமடைந்த உரிமையாளர் தகவலளித்ததன் பேரில் விரைந்து வந்த போலீசார், கிராம நிர்வாக தனி அதிகாரி சுமதி முன்னிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சாந்தி தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மகள், 2 பேரக் குழந்தைகள் மற்றும் இரு நாய்கள் கீழே சடலமாகவும் கிடந்துள்ளனர்.

குழந்தைகளுக்கும், நாய்களுக்கும் விஷம் கொடுத்து விட்டு, தூக்கில் தொங்கி உயிரிழந்த மகளின் சடலத்தை இறக்கி வைத்து விட்டு சாந்தி தூக்கில் தொங்கியிருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments