5.66 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் வெட்டுக்கிளிகள் கட்டுப்படுத்தப்பட்டது - மத்திய வேளாண் அமைச்சகம் தகவல்
நாட்டின் 10 மாநிலங்களில் 5 லட்சத்து 66 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் வெட்டுக்கிளிகள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக, மத்திய வேளாண் அமைச்சகம் அறிவித்துள்ளது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் மூலம் இது சாத்தியமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான பகுதிகளில் பூச்சிக் கொல்லி தெளிப்பு வாகனங்களுடன், போதுமான மனிதவள மற்றும் கட்டுப்பாட்டு குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது.
மேலும், ராஜஸ்தானில் சில மாவட்டங்களை தவிர்த்து வேறு எந்த மாநிலத்திலும், வெட்டுக்கிளிகளால் பெரிய பயிர் இழப்பு ஏற்படவில்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டு உள்ளது.
Comments