ஜம்மு காஷ்மீரில், உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலம் கட்டும் பணிகள் தீவிரம்
ஜம்மு காஷ்மீரில், உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலம் கட்டும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.
செனாப் நதியின் மீது 359 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படும் இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும் என பொறியியல் வல்லுனர்கள் தெரிவித்தனர்.
ஒன்று புள்ளி 3 கிலோமீட்டர் தூரமும், ஈபிள் கோபுரத்தைவிட 35 மீட்டர் அதிக உயரமும் கொண்ட இந்த பாலத்தை அமைக்கும் பணியில் ஆப்கான்ஸ் (Afcons) குழுமம் ஈடுபட்டு வருகிறது.
கட்டுமான பணிகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே நிறைவடையும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் சிக்கல் நிலவி வந்தது.
Comments