இ-பாஸ் முறை ரத்து குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் - ஆர்.பி.உதயகுமார்
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இ-பாஸ் முறையை ரத்து செய்ய முதலமைச்சர் களஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் அது குறித்து அறிவிப்பார் என்றும் வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டாளத்தில் உள்ள கொரோனா தடுப்பு முகாம் மற்றும் பரிசோதனை மையத்தை ஆய்வு செய்த பிறகு பேசிய அவர், தமிழகம் 28 சதவீதம் அளவுக்கு கூடுதலாக தென்மேற்கு பருவமழைப் பொழிவை பெற்றிருப்பதாக அமைச்சர் கூறினார்.
பவானிசாகர், மணிமுத்தாறு, பெருஞ்சாணி, பெரியாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் கடந்த ஆண்டைவிட நீரின் அளவு அதிகமாக உள்ளது என்றும், மேட்டூர், பாபநாசம், கிருஷ்ணகிரி, சோலையார் அணைகளில் நீரின் அளவு கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு கடந்த ஆண்டை விட அதிகமாக உள்ளதாகவும் ஆர்.பி.உதயகுமார் குறிப்பிட்டார்.
Comments