ரவுடி சங்கர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்
சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு, தேசிய மனித உரிமை ஆணைய விதிகளின் படி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படுகிறது.
இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இது போலி என்கவுண்டர் என கூறி கடந்த 2 நாட்களாக அவனது உடலை வாங்க உறவினர்கள் மறுத்து வந்தனர்.
இந்த நிலையில், என்கவுன்ட்டரில் சம்மந்தப்பட்ட காவல் துறையினர் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது, மாறாக சிபிசிஐடி போன்ற தனி அதிகாரம் கொண்ட புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என்ற தேசிய மனித உரிமைகள் ஆணைய விதிகளின் படி வழக்கு விசரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது.
இதனிடையே வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்படுவதால் கீழ்பாக்கம் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ரவுடி சங்கரின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.
Comments