எல்லைப் பிரச்சனைக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதே அரசின் அணுகுமுறை -பிபின் ராவத்
சீனாவுடனான எல்லைத் தகராறு குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ராணுவ நடவடிக்கை பரிசீலிக்கப்படும் என முப்படை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் அத்துமீறல்கள், ஊடுருவல்களை தடுப்பதும், அத்தகைய பிரச்சனைக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதுமே அரசின் அணுகுமுறை என ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.
கிழக்கு லடாக் எல்லையில் ஏற்கெனவே இருந்த நிலையை மீட்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். எல்லை விவகாரத்தில் உளவு அமைப்புகளிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை என்ற கருத்தையும் அவர் மறுத்துள்ளார்.
லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் அத்துமீறல்களை முறியடிக்க ராணுவ நடவடிக்கை என்ற வாய்ப்பும் உள்ளது என தெரிவித்துள்ள அவர், ராணுவ நிலையிலும் அரசு நிலையிலும் நடைபெறும் பேச்சுகள் பலனளிக்கவில்லை என்றால் மட்டுமே அந்த வாய்ப்பு பரிசீலிக்கப்படும் என கூறியுள்ளார்.
Comments