பெருவெள்ளத்தினால் பங்களாதேஷில் 3ல் ஒரு பகுதி அளவுக்கு பாதிப்பு

0 1661

பங்களாதேஷில் கனமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் அந்நாட்டில் 3ல் ஒரு பகுதி அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் வடியாததால் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகி உள்ளனர்.

பெருவெள்ளம் காரணமாக இதுவரை 161 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அங்கு கொரோனா தொற்று காரணமாக 2 லட்சத்து 92 ஆயிரம் பாதிப்புகளும், கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments