பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க உள்ளதாக வெளியான செய்திக்கு, ரஞ்சன் கோகாய் மறுப்பு
அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க உள்ளதாக வெளியான செய்திக்கு, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், மாநிலங்களவை எம்பியுமான ரஞ்சன் கோகாய் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பாஜக தரப்பில் அவர் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர் தருண் கோகாய் தெரிவித்திருந்த நிலையில், தான் அரசியல்வாதி அல்ல என்றும், முதலமைச்சர் வேட்பாளராக வேண்டும் என்பது போன்ற எண்ணம் தனக்கு இல்லை எனவும், ரஞ்சன் கோகாய் விளக்கம் அளித்துள்ளார்.
Comments