வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் உடல்நலம் பாதிப்பு எனத் தகவல்
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் உடல்நலம் பாதிக்கப்பட்டு கோமா நிலையில் உள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிம் தனது சகோதரிக்கு கூடுதல் பொறுப்புகளை ஒப்படைப்பது அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதற்கான அறிகுறியாகும் என தென்கொரிய அதிபரின் முன்னாள் கண்காணிப்புப் பிரிவு தலைமை அதிகாரியான ஷாங் சாங் மின் என்பவர் குறிப்பிட்டார்.
சீனாவைச் சேர்ந்த சிலர் இந்தத் தகவலை தமக்கு அளித்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், கிம் ஜோங் உன், கோமா நிலையில் இருப்பதாகவும் உறுதிபடத் தெரிவித்தார். வடகொரியாவில் சிறப்பான மருத்துவமனைகள் இல்லாததால் கிம் ஜோங் உன்னைக் காப்பாற்றுவதில் சிக்கல் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments