கொரோனாவுக்கு எதிராக புதிய சிகிச்சைக்கு அங்கீகாரம்- டிரம்ப் அறிவிப்பு

0 4611

சீனாவால் பரவிய கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தி எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்ற புதிய சிகிச்சை முறைக்கு அங்கீகாரம் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் தேர்தலுக்கு முன்பு கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று டிரம்ப் அரசு நிபுணர்களை வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த convalescent plasma என்ற சிகிச்சை முறைக்கு அவசர பயன்பாட்டுக்கான அங்கீகாரம் அளித்துள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த சிகிச்சையால் உயிரிழப்பு 35 சதவீதம் குறையும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் மாதம் இதனை அமலுக்குக் கொண்டு வருமாறு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இதற்கான உரிமம் பெற்ற  மருந்து உற்பத்தி நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.

நவம்பர் 3 ம் தேதி தேர்தலை சந்திக்கும் போது அமெரிக்காவில் கொரோனா மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்ற அறிவிப்புதான் வாக்குகளைப் பெற்றுத் தரும் என்று அதிபர் டிரம்ப் நம்புகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments