ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு தளவாடங்கள் மீது டிரோன் மூலம் பாகிஸ்தான் குண்டு வீசத் திட்டம்

0 2659
ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா மற்றும் சம்பா பகுதிகளிலுள்ள பாதுகாப்பு நிலைகள் மீது டிரோன் மூலம் பாகிஸ்தான் குண்டு வீச திட்டமிட்டுள்ளதாக எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா மற்றும் சம்பா பகுதிகளிலுள்ள பாதுகாப்பு நிலைகள் மீது டிரோன் மூலம் பாகிஸ்தான் குண்டு வீச திட்டமிட்டுள்ளதாக எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யும் ட்ரோன்களின் உதவியுடன் இந்தியாவுக்குள் போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஜூன் 20ஆம் தேதி அதிநவீன துப்பாக்கி, வெடிகுண்டு உள்ளிட்டவைகளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த டிரோன் ஒன்றை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

கடந்த ஆண்டு பஞ்சாப் எல்லைப் பகுதியில் ஏராளமான உளவு டிரோன் விமானங்களை அவர்கள் கைப்பற்றியுள்ளனர். கடந்த சனிக்கிழமை பஞ்சாபின் டார்ன் டரன் மாவட்டம் வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவர்களில் இருவரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments