அமெரிக்க வாழ் இந்திய மக்களின் வாக்குகளை குறிவைத்து அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியுடன் பங்கேற்ற நிகழ்ச்சிகள் அடங்கிய வீடியோ வெளியீடு
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களின் வாக்குகளை ஈர்க்கும் நோக்கில், இந்திய பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சிகள் அடங்கிய வீடியோவை அவரது பிரசாரக் குழு வெளியிட்டுள்ளது.
போர் மோர் இயர்ஸ் என தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவின் தொடக்கத்தில் ஹூஸ்டனில் கடந்த ஆண்டு நடந்த howdi modi நிகழ்ச்சியில் மோடி, டிரம்ப் கூட்டாக பங்கேற்ற காட்சிகளும், கடந்த பிப்ரவரி மாதம் குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் மோடி, டிரம்ப் பங்கேற்ற காட்சிகளும் உள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் அந்நாட்டில் வசிக்கும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி மக்களின் வாக்குகளை பெறும் நோக்கில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல் பாலிவுட் ஸ்டைலில் மேலும் 2 வீடியோக்களை வெளியிடவும் டிரம்ப் பிரசார குழு திட்டமிட்டுள்ளது.
America enjoys a great relationship with India and our campaign enjoys great support from Indian Americans! ???? pic.twitter.com/bkjh6HODev
— Kimberly Guilfoyle (@kimguilfoyle) August 22, 2020
Comments