சம தொலைவு பின்வாங்கல் சீன ஆலோசனைக்கு இந்தியா மறுப்பு

0 5475
லடாக்கின் பிங்கர் ஏரியாவில் இருந்து இருநாடுகளும் சமதொலைவுக்குப் படைகளைப் பின்வாங்கிக் கொள்வது என்கிற சீனாவின் ஆலோசனையை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது.

லடாக்கின் பிங்கர் ஏரியாவில் இருந்து இருநாடுகளும் சமதொலைவுக்குப் படைகளைப் பின்வாங்கிக் கொள்வது என்கிற சீனாவின் ஆலோசனையை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது.

கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்தியா - சீனா இடையிலான எல்லைத் தகராறைத் தீர்ப்பது பற்றி முதலில் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் நிலையிலான பேச்சு நடைபெற்றது. அதன்பின் ராணுவ அதிகாரிகள் நிலையிலான பேச்சுக்களும் நடைபெற்றன.

இந்தப் பேச்சுக்களின்போது முன்பிருந்த நிலையைப் பராமரிக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது. பிங்கர் 4 பகுதியில் இருந்து இரு நாட்டுப் படையினரும் சம தொலைவுக்குப் பின்வாங்குவது என்கிற ஆலோசனையைச் சீனா தெரிவித்ததாகவும், அதை ஏற்க இந்தியா மறுத்துவிட்டதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏப்ரல் - மே மாதங்களுக்கு முன்பு இருந்த நிலைகளைத் தாண்டி 5 கிலோமீட்டர் தொலைவு வரை சீனா படையினரைக் குவித்திருந்தது. அப்போது சீனாவின் ஆலோசனையை ஏற்க மறுத்த இந்தியா, முதலில் பிங்கர் ஏரியாவில் இருந்து சீனப் படைகளை முற்றிலும் விலக்கிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியது.

இந்தப் பேச்சுக்கள் நடைபெற்ற காலத்திலேயே, எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கும்படி ராணுவத்தினருக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்ததும் குறிப்பிடத் தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments