இலவச லேப்டாப்களில் இதுவரை எத்தனை திருடு போயுள்ளன ? அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிகளுக்கு உத்தரவு
மாணவர்களிடம் அளிப்பதற்காக வழங்கப்படும் இலவச லேப்டாப்களில், இதுவரை எத்தனை திருடு போயுள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசு பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச லேப்டாப்கள் பல்வேறு பள்ளிகளில் திருடுபோய் விடுவதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து காவல்துறையில் புகாரளித்து அதை மீட்க வேண்டும், இல்லையெனில் அதற்கு ஈடான தொகையை பள்ளிகள் செலுத்த வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து 2012-ம் ஆண்டு முதல் தற்போது வரை எத்தனை லேப்டாப்கள் திருடு போயுள்ளன?
அதில், எத்தனை மீட்கப்பட்டுள்ளன?
திருடுபோன லேப்டாப்களுக்கு ஈடான தொகை கல்வித்துறையிடம் செலுத்தப்பட்டதா? என்பது போன்ற விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
Comments