தமிழகத்தில் இ பாஸ் நடைமுறையை இன்றே ரத்து செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்

0 5156
புதுச்சேரியைப் போல் தமிழகத்திலும் இ-பாஸ் நடைமுறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பேரிடர் ஊரடங்கை அ.தி.மு.க. அரசு தொடர்ந்து நீட்டித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் சென்ற மாதமே அறிவுறுத்தியும்கூட, தமிழக அரசு இ-பாஸ் நடைமுறையை இன்றுவரை செயல்படுத்தி மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தைத் தடை செய்து, மக்களை முடக்கிப் போட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உலக முதலீட்டாளர் மாநாடுகள், வெளிநாட்டுப் பயணம், கொரோனா காலத்தில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி பெறப்பட்ட முதலீடுகள், உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments