நடிகர் சுசாந்த் சிங் மரண வழக்கு அவருடைய நண்பர் சித்தார்த் பிதானியிடம் சிபிஐ மீண்டும் விசாரணை

0 1809
இந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கு சுசாந்த்தின் நண்பர் சித்தார்த் பிதானியிடம் சிபிஐ மீண்டும் விசாரணை

இந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில் அவருடைய நண்பர் சித்தார்த் பிதானியிடம் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர்.

மும்பை பாந்த்ராவில் உள்ள குடியிருப்பில் சுசாந்த் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அப்போது அவரது சடலத்தை முதன்முதலில் நண்பர் சித்தார்த் பிதானிதான் பார்த்தார். இதனால் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவரிடம் சிபிஐ ஏற்கெனவே விசாரணை நடத்தியது.

இந்நிலையில் மும்பையிலுள்ள டிஆர்டிஓ விருந்தினர் இல்லத்தில் வைத்து மீண்டும் அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதேபோல் சமையல்காரர் நீரஜ்ஜூம் அங்கு விசாரணைக்காக ஆஜரானார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments