நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு அதிகாரி உள்பட 2 பேர் சஸ்பெண்ட்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் செலவுக்கு பணம் கேட்ட நெல் கொள்முதல் அதிகாரி உள்பட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
குழுமூர் கிராமத்தை சேர்ந்த வள்ளியம்மை என்பவர் 62 நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்போது அவரிடம் அங்கிருந்த நெல் கொள்முதல் உதவியாளர் சிவசக்தி என்பவர் 40 ரூபாய் செலவுக்கு தரவேண்டும் எனக் கூறி பணத்தை பெற்றுள்ளார்.
இதனைக் கேள்விப்பட்ட வள்ளியம்மையின் உறவினர் அமுத கண்ணன் மற்றும் சிலர் சிவசக்தியிடம் வந்து எதற்காக மூட்டைக்கு 40 ரூபாய் வாங்கினார்கள் என கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு அவர் கூறிய காரணங்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அரியலூர் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக பிராந்திய மேலாளர் உமாசங்கர் மகேஸ்வரன் விசாரணை நடத்தினார்.
பின்னர் விவசாயிகளிடம் மூட்டை ஒன்றுக்கு தலா 40 ரூபாய் வசூல் செய்ததற்காக கொள்முதல் அதிகாரி வரதராஜன் மற்றும் உதவியாளர் சிவசக்தி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Comments