கைலாசா நாட்டிற்கான புதிய நாணயங்களை வெளியிட்டுள்ளார் சர்ச்சை சாமியார் நித்யானந்தா

0 8845
தனது கைலாசா நாட்டிற்கான புதிய நாணயங்கள் என்று கூறி சில தங்க நாணயங்கள் உள்ளிட்டவற்றை சர்ச்சை சாமியார் நித்யானந்தா வெளியிட்டுள்ளார்.

தனது கைலாசா நாட்டிற்கான புதிய நாணயங்கள் என்று கூறி சில தங்க நாணயங்கள் உள்ளிட்டவற்றை சர்ச்சை சாமியார் நித்யானந்தா வெளியிட்டுள்ளார்.

ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவாக உள்ள நித்யானந்தா தான் கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக கூறி வருகிறார்.

கைலாசாவுக்கென ரிசர்வ் வங்கி, கரன்சிகள் என அடுத்தடுத்து அறிவிப்பு வெளியிட்ட அவர், விநாயகர் சதுர்த்தியன்று முறையாக அதை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறியிருந்தார். அதன்படி, சமூகவலைதளத்தில் புதிய தங்க நாணயங்களை நித்யானந்தா அறிமுகப்படுத்தியுள்ளார்.

கால் காசு முதல் 10 காசு வரை 5 வகையான தங்க நாணயங்களை வெளியிட்டுள்ள அவர், இந்த காசுகளை கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். விரைவில் கைலாசாவுக்கான பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments