மெரினா கடற்கரையில் விநாயகர் சிலைகளைக் கரைக்க அனுமதி இல்லை-சென்னை காவல் ஆணையர்
சென்னையில் நேப்பியர் பாலம் முதல் பட்டினப்பாக்கம் வரையுள்ள மெரினா கடற்கரையில் விநாயகர் சிலைகளைக் கரைக்க அனுமதி இல்லை என மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியையொட்டிச் சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு செய்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு அனைத்து அமைப்புகளும் ஒத்துழைப்பதாகவும், தடையை மீறி ஓரிரு இடங்களில் சிலை வைத்தவர்கள் மீது வழக்குப் பதிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Comments