நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது

0 8552
நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது

சூரரைப் போற்று திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30இல் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாக அப்படத் தயாரிப்பாளரும், நாயகனுமான சூர்யா தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள படத்தை சுதா கொங்காரா இயக்கியுள்ளார். கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், படங்களை திரையிட முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில் சூர்யா வெளியிட்டுள்ள அறிவிப்பில், தயாரிப்பாளராக மனசாட்சியுடன் அமேசான் பிரைமில் வெளியிடும் முடிவை எடுத்திருப்பதாகவும், இதை திரையுலகை சார்ந்தவர்கள் உள்பட அனைவரும் புரிந்து கொள்ள வேண்டுமெனவும் கேட்டு கொண்டுள்ளார்.

திரைப்பட வெளியீட்டு தொகையில் இருந்து  5 கோடி ரூபாயை பொதுமக்கள், கொரோனா கள பணியாளர்கள் உள்ளிட்ட தேவையுள்ளவர்களுக்கு  பகிர்ந்தளிக்க முடிவு செய்துள்ளதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments