தேசிய மாநாட்டின் மூலம் ரூ.524 கோடி நிதி திரட்டல் - ஜோ பிடென் பிரச்சாரக் குழு

0 1452

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடென் மற்றும் அவரது குழு, 4 நாள் தேசிய மாநாட்டின் மூலம் இந்திய மதிப்பில் 524 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளதாக பிரச்சாரக் குழு தெரிவித்துள்ளது.

வடக்கு கரோலினா மாநிலத்தின் வில்மிங்டனில் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு கடந்த 17ம் தேதி தொடங்கி ஆன்லைன் மூலம் நடைபெற்றது.

இது 15 டிஜிட்டல் இயங்குதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ததன் மூலம் 12 கோடி பார்வையாளர்களை ஈர்த்ததாகவும், தொலைக்காட்சி ஒளிபரப்பை 8 கோடி பேர் வரை பார்த்ததாகவும் பிடென் பிரச்சாரக்குழு அறிக்கை தெரிவித்துள்ளது.

நீல்சன் ஏஜென்சியின் தரவுகளின்படி, மாநாட்டின் இறுதி இரவு மட்டும் சுமார் 2 கோடியே 40 லட்சம் தொலைக்காட்சி பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments