தமிழகத்தில் 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது

0 1804
தமிழகத்தில் 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும்.

அதன்படி நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதும் 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரப் பட்டியலை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில் தமிழகத்தைச் சேர்ந்த 2 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதன்படி, சென்னை அசோக்நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஆர்.சி.சரஸ்வதி, விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திலிப் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

இதுதவிர சிறப்புப்பிரிவில் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் 2 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments