வேனில் ரகசிய அறை அமைத்து 50 கோடி ரூபாய் மதிப்புள்ள கொகைன் கடத்தல்
இங்கிலாந்தில் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள கொகைன் போதைப்பொருள் கடத்திய நபருக்கு ஏழரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
டோன்காஸ்டர் என்ற இடத்தில் கடந்த ஆண்டு பெட்ரோல் பங்கிற்கு வந்த வேனை மடக்கிய போலீசார் அதனை சோதனையிட்டனர்.
அப்போது வேனில் ரகசிய அறை அமைத்து கொகைன் போதைப் பொருள் கடத்தப்பட்டது தெரியவந்தது.
ஒரு கிலோ பொட்டலங்களாக பிடிபட்ட சுமார் 45 கிலோ கொகைனின் சர்வதேச மதிப்பு 50 கோடியாகும்.
இது தொடர்பாக நபில் சவுத்ரி என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு ஷெபீல்ட் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி போதைப்பொருள் கடத்திய நபில் சவுத்ரிக்கு ஏழரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்புக் கூறினார்.
Comments