குழந்தைகளுக்குத் தாய்ப்பாலில் கொரோனா பரவ வாய்ப்பில்லை
தாய்ப்பால் மூலம் கொரோனா தொற்று பரவாது என்று ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா சான்டியாகோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதற்கான ஆய்வுகளை மேற்கொண்டனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 பெண்களிடமிருந்து தாய்ப்பால் மாதிரிகளை சேகரித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுகள் தாய்ப்பால் பாதுகாப்பானது என்பதை உறுதி செய்துள்ளன.
கொரோனா பரவாது என்பதுடன் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் தாய்ப்பால் பாதுகாப்பு அரணாக விளங்குவதாக அந்த ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தர மறுக்கும் பெண்களுக்கு தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்த்துவதுடன், அது தொடர்பான அச்சங்களைப் போக்கும் வகையில் இருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்
Comments