வந்தே பாரத் திட்டத்தின் அடிப்படையில் 44 ஜோடி செமி-அதிவிரைவு ரயில் உற்பத்திக்கான சர்வதேச டெண்டர் ரத்து
வந்தே பாரத் திட்டத்தின் அடிப்படையில் 44 செமி-அதிவிரைவு ரயில் உற்பத்திக்கான சர்வதேச டெண்டரை ரயில்வே அமைச்சகம் ரத்து செய்துள்ளது.
உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திருத்தியமைக்கப்பட்ட, டெண்டர் விண்ணப்பம் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் இந்த திட்டத்திற்கான டெண்டர் கோரப்பட்ட நிலையில், சீனாவை சேர்ந்த சிஆர்ஆர்சி யோங்ஜி எலெக்ட்ரிக் கோ லிமிடெட் எனும் நிறுவனத்தின், இந்திய கூட்டாளியான ஜேவி எனும் நிறுவனம் விண்ணப்பித்தது.
இந்நிலையில், ஒப்பந்தத்தை கைப்பற்றுவதற்கான இறுதி பட்டியலில், அந்நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றதால் டெண்டர் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
Comments