வடமாநிலங்களில் களை கட்டிய விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
தமிழகத்தைப் போன்று வடமாநிலங்களின் முக்கிய நகரங்களிலும் இன்று கணேஷ் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
கொரோனோ நோய்த்தொற்று அதிகரித்து வருவதால், மகாராஷ்டிர மாநிலம் புனேயில் விநாயகர் சதுர்த்திக்கு என பொருட்களை சந்தையில் வாங்குவதைத் தவிர்த்தனர். கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டே பக்தர்கள் விநாயகர் சிலையை வடிவமைத்தனர்.
கோவாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சந்தைகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பிக் காணப்படும். இந்த ஆண்டு சந்தைகளில் கூட்டம் குறைவாக இருப்பினும் வியாபாரம் திருப்திகரமாக இருப்பதாக வணிகர்கள் தெரிவித்தனர்.
சூரத் நகரில் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு உலர் பழங்களைக் கொண்டே விநாயகர் சிலை தயாராகியுள்ளது.
மும்பையின் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் இன்று காலை முதலே வழிபாடுகள் தொடங்கி விட்டன. விநாயகருக்கு சிறப்பு ஆராதனைகள், படையல்கள் இடப்பட்டன,
Comments