குழந்தை வளர்க்க ஆசை ரூ 5 லட்சம் கொடுத்த திருநங்கைகள் கொலை..! அம்மா கனவு கலைந்த சோகம்

0 14665
தாய்மை ஏக்கத்தை போக்க பச்சிளம் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்க்க ஆசைப்பட்ட திருநங்கைகளிடம், 5 லட்சம் ரூபாய் பறித்த மோசடி கும்பல் ஒன்று பணத்தை திருப்பிக்கொடுக்காமல் இரண்டு திருநங்கைகள் உட்பட மூன்று பேரை, கொலை செய்து மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தாய்மை ஏக்கத்தை போக்க பச்சிளம் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்க்க ஆசைப்பட்ட திருநங்கைகளிடம், 5 லட்சம் ரூபாய் பறித்த மோசடி கும்பல் ஒன்று பணத்தை திருப்பிக்கொடுக்காமல் இரண்டு திருநங்கைகள் உட்பட மூன்று பேரை,  கொலை செய்து மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

நெல்லை சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த திருநங்கைகளான அனுஷ்கா, பவானி, பவானியின் கணவர் முருகன் ஆகியோரை கடந்த சில தினங்களாக காணவில்லை என சக திருநங்கைகள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

கடைசியாக சேலத்தை சேர்ந்த ரிஷிகேஷ் என்பவனுடன் மூவரையும் பார்த்ததாகக் கூறி, அவனைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ரிஷிகேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களை கொலை செய்து பாளையங்கோட்டை புறநகர் பகுதி நான்குவழிச்சாலை அருகே உள்ள இரண்டு கிணறுகளில் வீசியது தெரியவந்தது.

திருநங்கைகள் பவானி, அனுஷ்கா ஆகியோரை திருணம் செய்து வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார் முருகன். மூவருக்கும் குழந்தை ஒன்றை தத்து எடுத்து வளர்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது.

தங்களை அவ்வப்போது சந்திக்க வரும் ரிஷிகேஷிடம் இதனை தெரிவிக்க, புதிதாக பிறந்த பச்சிளம் ஆண் குழந்தையை கொண்டுவருவதாக கூறி 5 லட்ச ரூபாயை பெற்றுச் சென்ற ரிஷிகேஷ் அதன் பின்னர் அங்கு செல்வதை நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகின்றது.

நீண்ட நாட்கள் ஆகியும் குழந்தையையும் தராமல் பணத்தையும் திருப்பித் தராமல் அலைக்கழித்து வந்த ரிஷிகேஷ் குறித்து அவனது கூட்டாளியான ஸ்னோவின் என்பவரிடம் முறையிட்ட திருநங்கைகள் பணத்தை வாங்கித் தரக் கூறியுள்ளனர். ஆனால் பணத்தை வாங்கிக் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகின்றது.

இதற்கிடையே ரிஷிகேஷ் தனது சகோதரியை கூட்டாளி ஸ்னோவின்னுக்கு திருமணம் செய்து கொடுக்க நிச்சயதார்தம் செய்துள்ளான். இந்த தகவல் அறிந்த திரு நங்கைகள் இருவரும், ரிஷிகேஷின் சகோதரியை சந்தித்து ரிஷிகேஷ் மற்றும் ஸ்னோவின் ஆகிய இருவரும் திருநங்கைகளுடன் தொடர்பில் இருந்த தகவலை அம்பலப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து, ஸ்னோவின் திருமணம் நின்று போனதாகவும் ரிஷிகேஷின் மோசடி வேலைகள் குடும்பத்திற்கு தெரியவந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதையடுத்து ஆத்திரம் அடைந்த இருவரும் தங்கள் கூட்டாளியான செல்லத்துரையை துணைக்கு அழைத்துச்சென்று முதலில் அனுஷ்காவை 20 நாட்களுக்கு முன்பாக ஏமாற்றி அழைத்துச்சென்று கைகால்களை கட்டி கழுத்தை நெரித்து கொலை செய்து கிணற்றில் வீசியுள்ளனர்.

அவரை தேடி அலைந்த பவானி மற்றும் முருகனை 3 தினங்களுக்கு முன்பு நயவஞ்சகமாக பேசி அழைத்துச்சென்று அடித்து கொலை செய்து மூட்டையில் கட்டி அங்கிருந்த கிணற்றி வீசிய தகவல் தெரியவந்தது.

இதையடுத்து மூவர் கொலை சம்பவம் தொடர்பாக ரிஷிகேஷ், ஸ்னோவின், செல்லத்துரை ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தாய்மை அடைய முடியாத ஏக்கத்தை போக்க, குழந்தையை தத்து எடுத்து வளர்த்து, "அம்மா" என்னும் அந்தஸ்தை பெறும் ஆசையில் இருந்த இரு திருநங்கைகளும், தங்களிடம் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அந்த மோசடி கும்பல் இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments