விண்வெளி நிலையத்தின் ரஷ்ய பிரிவில் காற்று கசிவு விகிதம் அதிகரிப்புக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது - நாசா
சர்வதேச விண்வெளி நிலையத்தின் ரஷ்ய பிரிவில் காற்று கசிவு குறித்து 3 பேர் கொண்ட குழு ஆய்வு செய்யும் என நாசா மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் ரஷ்ய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய பிரிவின் அறை ஒன்றில் காற்று கசிவு விகிதம் சற்று அதிகரித்துள்ளதற்கான அறிகுறிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்டதாக நாசா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதனால் விண்வெளி நிலையம் மற்றும் வீரர்களுக்கு உடனடி ஆபத்து இல்லை என்ற போதிலும், நாசாவின் கிறிஸ் காசிடி, ரஷ்யாவின் இவான் வாக்னர், அனடோலி இவானிஷின் ஆகிய விண்வெளி வீரர்கள் அடங்கிய குழு இந்த வார இறுதியில் காற்று கசிவு குறித்து ஆய்வு செய்து சீர் செய்யும் என்று நாசா மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது.
Comments