உ.பி.,யில் கைகுட்டையால் முகக்கவசம் அணிந்த இளைஞரை லத்தியால் அடித்த அதிகாரி சஸ்பெண்ட்
உத்தரபிரதேசத்தில் கர்சீப்பை மாஸ்க்காக அணிந்த காரணத்திற்காக, 2 இளைஞர்களை, ஊர்க்காவல் படையினர் லத்தியால் சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான சோதனையில், பலியா மாவட்டத்தில் (Ballia district ) ஊர்காவல் படையினர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள கடையில் கர்சிப்பை முகக்கவசமாக அணிந்து ஒரு இளைஞர் நிற்பதை கண்டு, கடையிலிருந்து அவரை வெளியே இழுத்து வந்து கடுமையாக தாக்கினர். இதை தடுத்த இளைஞரின் சகோதரரையும் ஊர்க்காவல் படையினர் சுற்றிநின்று தாக்கினர். இதில் இளைஞர் ஒருவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து ஊர்காவல் படையினருக்கு தலைமை ஏற்று சென்ற அதிகாரி அசோக் செளதரியை மாநில அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.
Comments