விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு களைகட்டும் பூக்கள் விற்பனை
நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பூக்கள் விற்பனை களைகட்டியுள்ளது. சேலம், மதுரை, திண்டுக்கல், திருவண்ணாமலை, தருமபுரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனகாம்பரம் கிலோ ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனையாகிறது.
குண்டுமல்லி கிலோ 800 முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகும் நிலையில் சாமந்தி, சம்பங்கி, அரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பூக்களும் முந்தைய நாளை விட கணிசமாக விலை உயர்ந்து காணப்பட்டன. 4 மாதங்களாக விற்பனையாகாமல் செடியிலேயே கருகிய பூக்களுக்கு நல்ல விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Comments