சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தோட்டக்கலைத்துறை சார்பில் விதை விநாயகர் விற்பனை
சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத, பசுமையை ஏற்படுத்தும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் விதை விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப் படுகின்றன.
நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் ரசாயனம் கலக்காத விநாயகர் சிலைகளை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தோட்டக்கலைத்துறை சார்பில், சென்னை மாதவரம் பால்பண்ணை வளாகத்தில் 1000 விதை விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், களிமண்ணால் ஆன விநாயகர் சிலையில் மூலிகை விதைகளை வைத்து விற்பனை செய்யப்படுகின்றது. ஆரம்ப விலை 100 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தோட்டக்கலைத்துறை சார்பில் விதை விநாயகர் விற்பனை #Chennai | #vinayagarchaturthi #SeedStatue https://t.co/gcFOI82uKk
— Polimer News (@polimernews) August 21, 2020
Comments